திருச்சியில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது, அதிமுக கட்சி உடைவதற்கு நாங்கள் காரணமில்லை. அதேநேரம் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியே போனதற்கு கருணாநிதி அவரை கட்சியிலிருந்து விளக்கியது தான் காரணமாகும். அதேபோன்று அன்று முதல் இன்று வரையிலும் கட்சிக்குள்ளும் பிளவு இருந்திருக்கிறது. மேலும் கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்படுவதற்கு நாங்கள் எந்த விதத்திலும் காரணமில்லை. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை வீழ்த்த மக்கள் நினைக்கின்றனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கின்றனர் மற்றும் வெளியில் சென்றனர் என்பது பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே வருகின்ற தேர்தலில் எத்தனை போட்டி வந்தாலும் சரி திமுக அரசானது வீழ்த்தப்படும். இதனிடையில் திடீரென்று திரைத்துறையில் இருந்து வந்த விஜய் ஏதோ ஒன்றை பேசி வருகிறார் என்பதற்காக தவெக மாற்றாக வர முடியாது. பா.ஜனதா கொள்கை எதிரி என தளபதி விஜய் கூறுகிறார். முதலில் அவருடைய கொள்கை என்ன என்று விஜய் சொல்லி இருக்கிறாரா?. எனவே அவருடைய பேச்சு அர்த்தமற்றது ஆகும் என பாஜக தலைவர் ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
