கரூரில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், MLA செந்தில்பாலாஜியை பாராட்டி புகழ்ந்து பேசினார். இதனால், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இதே செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோது, அவரை ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இன்று அவர் திமுகவில் சேர்ந்ததற்குப் பிறகு, ஸ்டாலின் அவரை உத்தமர் என்று புகழ்கிறார்.

இது எப்படியான இரட்டை நிலைப்பாடு?” எனக் கேள்வி எழுப்பினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்டாலின் செந்தில்பாலாஜியை விமர்சித்த பழைய காணொளியையும் இபிஎஸ் அங்கு காட்டினார்.

“>