அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அரசியல் பரபரப்பு தொடர்கிறது.
இதுகுறித்து விளக்கமளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் யாரேனும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கம். அதன்படி தான் செங்கோட்டையன் விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும், டிடிவி தினகரனை குறித்தும் இபிஎஸ் பதிலளித்துள்ளார். “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் டிடிவி தினகரன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவில் இல்லாதவர்.
இப்போது அவர் பேசும் கருத்துகள் அனைத்தும் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றன” என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், செங்கோட்டையன் நீக்கமும், டிடிவி தினகரன் கருத்துகளும் அதிமுக உள்நிலையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
