அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

குறிப்பாக, சந்திப்பு முடிந்து வெளியேறியபோது ஈபிஎஸ் முகத்தை மறைத்தார் என கூறி அரசியல் பரபரப்பு கிளப்பப்பட்டது. இதனால், அதிமுகவினரிடமும், அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு பேச்சுகள் எழுந்தன.

இந்த நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், “நான் அமித் ஷாவை சந்தித்து திரும்பும் போது, முகத்தை துடைக்க கைக்குட்டையை எடுத்தேன். ஆனால், அதை முகத்தை மூடியதாக தவறாகப் புரிந்து அரசியல் செய்துவிட்டார்கள்.

நான் எந்த நிலையிலும் முகத்தை மறைக்கவில்லை” எனத் தெளிவுபடுத்தினார். இதன் மூலம் திமுகவின் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே முன்வைக்கப்பட்டவை என அதிமுக வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.