தூத்துக்குடியில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்புடன் பணிபுரிந்து 3,50.000 புதிய உறுப்பினர்களை சேர்த்து இருக்கின்றனர். தளபதி விஜய் டிஎம்கே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இவர் புரிந்து பேசுகிறாரா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.

இதனால் வரை விஜய் தமிழக மக்களுக்கு, இளைஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு மற்றும் மீனவர்கள் யாருக்காவது உதவி செய்திருக்கிறாரா?. இப்படி மக்களுக்காக எதுவும் செய்யாமல் கேள்வி கேட்பது எளிது. அதே நேரம் பாஜக அரசு எத்தனை இடைஞ்சல் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு மக்களை நம்பியே நாங்கள் செயல்பட்டு வரும் நிலையில், யார் புதியதாக கட்சி தொடங்கினாலும் திமுகவை பற்றி தான் பேசுவார்கள். ஏனெனில் டிஎம்கே தான் மக்கள் மன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு இயக்கமாகும். எனினும் திமுகவை எந்த கொம்பனும் தொட முடியாது. திரைத்துறையில் இருப்பவர்கள் கூட்டத்தை கூட்டலாமே தவிர திமுகவை அசைக்க முடியாது. தமிழக மக்கள் டிஎம்கே பக்கம் தான் இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.