இந்தியாவில் வாகனங்களுக்கான எரிபொருள் தேவையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலுக்கு மாற்றாக 100% எத்தனாலை (Ethanol) எரிபொருளாகப் பயன்படுத்துவதற்குச் சட்டப்பூர்வ அனுமதி அளிப்பதற்கான இறுதி விதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் விதிமுறைகளை இறுதி செய்யும் முக்கியக் கோப்புகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோலுக்கு மிகச்சிறந்த மாற்று எரிபொருளாக உருவெடுப்பதற்கான அனைத்து திறன்களும் எத்தனாலுக்கு முழுமையாக உண்டு என்று பளீச்செனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த 100% எத்தனால் பயன்பாட்டின் மூலம், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதி செலவுகள் இனி வரும் காலங்களில் பெருமளவுக்குக் குறையும் என்றும் அவர் தனது பேட்டியில் ஆணித்தரமாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கும் மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை  தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.