ஷாஜப்பூர் மாவட்டத்திலுள்ள டெப்போ சாலையில் இயங்கி வரும் தனியார் விடுதி ஒன்றில், சமையல் அறையில் உணவு தயாரித்துக்கொண்டிருந்த பெண் ஊழியர் மீது பிரஷர் குக்கர் திடீரென வெடித்துச் சிதறியதில் அவர் காயமடைந்தார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், விடுதி மற்றும் கல்வி நிறுவனங்களின் சமையலறை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்துப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

“>

 

காயமடைந்த அந்தப் பெண் ஊழியருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, எனினும் குக்கர் வெடித்ததற்கான சரியான காரணம் மற்றும் அந்த விடுதியில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.