உத்தரப்பிரதேசம், காசியாபாத்தில் உள்ள அசோடெக் சொசைட்டியில் 4 பள்ளி மாணவர்கள் 20 நிமிடங்கள் லிஃப்டில் சிக்கிய பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.

சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அதில், லிஃப்ட் கதவுகள் சுமார் 20 நிமிடங்கள் முழுவதும் மூடப்பட்டிருந்தது தெரிகிறது. சிக்கிய குழந்தைகள் அவசரகால பொத்தானை அழுத்தி உதவி பெற முயற்சிக்கின்றனர். மன உளைச்சலுடன் கேமராவை நோக்கி அழுது கூப்பிடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. சிலர் கதவுகளை தட்டி உதவிக்காக சைகை செய்வதும் பதிவாகியுள்ளது.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, லிஃப்ட் கதவுகள் நடுவில் ஓரளவு திறந்தபோது ஒரு நபர் வந்து குழந்தைகளை ஒவ்வொன்றாக மீட்கத் தொடங்கினார். ஆனால் அதற்கு முன், லிஃப்ட் கதவுகள் இரண்டு முறை திறந்து மூடியது என்பதும் காட்சிகளில் தெரிகிறது.

“>

 

சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், லிஃப்டின் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) ஜூலை 31-ஆம் தேதியுடன் காலாவதியானது. இதற்கு முன், ஜூன் 23-ஆம் தேதி அதே சொசைட்டியில் ஒரு குடும்பம் லிஃப்டில் சிக்கிய சம்பவமும் நடந்ததாக தகவல். அப்போது, கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தான் அந்தக் குடும்பம் மீட்கப்பட்டதாக ஒரு  செய்தி தெரிவித்துள்ளது.

இச்சம்பவம், சொசைட்டியில் லிஃப்ட் பராமரிப்பு குறைபாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.