உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை முற்றிலும் மீறி 7 வயது சிறுவனை பிஸியான சாலையில் பைக் ஓட்டச் செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது.
ஹர்தோய்–ஷாஜஹான்பூர் சாலையில், வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை அந்த சிறுவன் ஹேண்டில்பாரைப் பிடித்து ஓட்ட, பின்னால் ஒரு ஆண் அமர்ந்திருப்பது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் ஒருவர் இந்த ஆபத்தான காட்சியை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், பைக் மிக வேகமாகச் செல்லும் போது, சிறுவனின் பாதுகாப்பு மட்டுமின்றி, மற்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் காணப்படுகிறது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் கிளப்பியுள்ளது. “இது போன்ற அலட்சியமான மற்றும் பொறுப்பில்லாத செயல்கள் எந்த நேரமும் பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்” என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
हरदोई- सात साल के बच्चे से बाइक चलवा रहा युवक सड़क पर फर्राटा भरते हुए बाइक चला रहा था बालक कार चालक ने बनाया वीडियो ,वायरल कोतवाली देहात क्षेत्र के हरदोई शाहजहांपुर मार्ग का मामला@hardoipolice@Uppolice pic.twitter.com/TFyMbf3ogE
— India News UP/UK (@IndiaNewsUP_UK) August 9, 2025
“>
இந்த சம்பவம் குறித்து ஹர்தோய் காவல்துறை, X – பக்கத்தில், “, பொறுப்பு ஆய்வாளருக்கு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
