நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் பத்ராபூர் நோக்கிப் புறப்பட்ட புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஆர்-72 (ATR 72) ரக விமானம், வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Buddha air को last flight दुर्घटना , भगवानको कृपाले सवै सकुशल ! pic.twitter.com/IbkiEiyIxH
— Bipin Sapkota (@bipinsapkota213) January 2, 2026
“>
பத்ராபூர் விமான நிலையத்தில் இரவு 9:08 மணியளவில் தரையிறங்கியபோது, ஓடுபாதையின் முடிவைத் தாண்டி சுமார் 200 மீட்டர் தூரம் புல்வெளிப் பகுதிக்குள் சறுக்கிச் சென்ற விமானம், அங்குள்ள ஒரு சிறிய ஓடையின் அருகே நின்றது. இக்கட்டான இச்சூழ்நிலையில் விமானிகள் சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால், விமானத்திலிருந்த 55 பேரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
🇳🇵⚡ Jhapa, Nepal: Buddha Air confirmed that its ATR aircraft operating from Kathmandu veered off the runway while landing at Bhadrapur Airport in Nepal.
⚠️ All 51 passengers and 4 crew members are safe. The aircraft reportedly stopped about 300 meters east of the runway. pic.twitter.com/ZKxJqrAF9h
— Osint World (@OsiOsint1) January 2, 2026
“>
விபத்தைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். இச்சம்பவம் குறித்து நேபாள விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
