ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் நீண்டகால ஆட்சி 2026-ஆம் ஆண்டில் முடிவுக்கு வரக்கூடும் என்றும், ஒரு புதிய தலைவரின் எழுச்சி இருக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், அடுத்த ஆண்டில் சீனா – தைவான் இடையேயான போர் மற்றும் ரஷியா – அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்தை எட்டி, அது மூன்றாவது உலகப்போராக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவின் (AI) அசுர வளர்ச்சி மனிதகுலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என்றும், நவம்பர் மாதவாக்கில் வேற்றுகிரகவாசிகள் விண்கலம் மூலம் பூமியைத் தொடர்புகொள்ளக் கூடும் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பாபா வங்காவின் கணிப்புகளாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இயற்கை சீற்றங்களால் பூமியின் 8 சதவீதப் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும், உலக அளவில் கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் இந்தக் கணிப்புகள் எச்சரிக்கின்றன.
குறிப்பாக பங்குச்சந்தைகள் மற்றும் நாணய மதிப்புகள் வீழ்ச்சியடைந்து, தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொடக்கூடும் எனக் கூறப்படுகிறது.
பாபா வங்காவின் இத்தகைய கணிப்புகள் பெரும்பாலும் எதிர்மறையாகவும் அச்சமூட்டும் வகையிலும் இருந்தாலும், இவை அனைத்தும் அப்படியே நடக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் உறுதியும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
