மராட்டிய மாநிலம் ஹின்பால்னர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் அஜய் பஞ்சல். 12ம் வகுப்பு வரையிலும் படித்திருக்கும் இவர் காவலர் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்கிடையில் அஜய்யின் தந்தை காய்கறிகளை விற்று அதன் வாயிலாக கிடைக்கும் வருமானத்தின் மூலம் தன் குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் காவலர் போட்டி தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்காக அஜய் தன் தந்தையிடம் பணம் கேட்டிருக்கிறார். தற்போது பணமில்லை என்று தந்தை கூறியுள்ளார். இதற்கிடையில் விறகு அனைத்தும் நனைந்து விட்டதால் அஜய்யின் தாய் தேவிதாஸ் கேஸ் சிலிண்டர் வாங்கி உள்ளார். இதனை அறிந்த அஜய் சிலிண்டர் வாங்குவதற்கு மட்டும் உங்களிடம் பணம் இருக்கிறது. அதேநேரம் தேர்வு கட்டணம் செலுத்த எனக்கு பணம் தரவில்லை என பெற்றோரிடம் அஜய் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் போது தேவிதாஸ் தன் மகனிடம் காலையில் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார். அதன்படி அஜய் மறுநாள் காலை தேர்வு கட்டணம் செலுத்த பணம் கேட்டு மீண்டும் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபமடைந்த அஜய் மரக்கட்டையால் தன் தந்தையை தாக்கியுள்ளார். இதன் காரணமாக பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜய்யை கைது செய்தனர். இவ்வாறு பணம் கொடுக்காததால் தந்தை என்று பாராமல் மகன் அடித்துக் கொலை செய்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
