மத்தியபிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள வைர சுரங்கத்தின் குறிப்பிட்ட பகுதியை ராஜ்பூரில் வசிக்கும் வினிதா கோண்ட் என்ற பழங்குடியின பெண் மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடி வந்தனர். இந்நிலையில் வினிதா 3 வைரங்களை கண்டுபிடித்தார். இது 1.48 காரட், 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்டது ஆகும். இந்த வைரங்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அதுமட்டுமின்றி இந்த வைரங்கள் பல லட்சத்திற்கு ஏலம் போகும் என தெரிகிறது. இது தொடர்பாக வைர வியாபாரி அனுபம்சிங் கூறி இருப்பதாவது “இதில் ஒன்று உயர்தரமிக்கது, மற்ற 2 வைரமானது குறைந்த தரம் கொண்டது ஆகும் என தெரிவித்துள்ளார்.