உத்தரபிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய கிராமப் பாதையில் இருந்து பிரதான சாலைக்குச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் வேகமாக வந்த பிக்கப் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதமடைந்ததோடு, அதில் பயணம் செய்த இரண்டு பேரும் கடுமையாக காயமடைந்தனர். சம்பவம் முழுவதும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
🚨Fatehpur UP: Uncontrolled pickup truck hits bike riders with strong impact. who is at fault here? pic.twitter.com/7D6R4zRwnb
— Deadly Kalesh (@Deadlykalesh) September 17, 2025
“>
அதிர்ச்சியளிப்பதாவது, விபத்துக்குப் பிறகு காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, பிக்கப் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது. இதனால் இரத்தக் காயங்களுடன் சாலையில் துடித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு அப்பகுதி மக்கள் விரைந்து உதவி செய்தனர்.
பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக தலைமறைவான பிக்கப் லாரி மற்றும் அதன் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
