தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற்றது. நடிகர் விஜயின் முதல் மாநாடு நடந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. முதல் மாநாட்டினை நடத்திய விஜய் திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று அறிவித்தார். அதே சமயத்தில் பாஜகவை கூட மறைமுகமாக விமர்சித்தார். நடிகர் விஜய் மாநாட்டில் பேசிய ஒவ்வொரு கருத்துகளும் அனல் பறக்க அமைந்தது. கூட்டத்தை அதிர வைக்கும் அளவிற்கு விஜயின் குரல் ஒலித்தது. நடிகர் விஜய்யின் முதல் மாநாடு முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகும் நிலையில் இன்றளவும் விஜயின் மாநாடு பற்றி பேசப்படுகிறது. அதன்பிறகு செயற்குழுக் கூட்டங்கள் மற்றும் மாநாடு நடத்த இடம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவைகளை விஜய் நடத்தினார்.

நடிகர் விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடும் நிலையில் தளபதி 69 படத்திற்கு பிறகு படங்களின் நடிக்காமல் முழுநேரமாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கும் நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும் தற்போது நடிகர் விஜய் மாநாடு நடந்த ஒரு மாத மாநிலத்தில் கொள்கை திருவிழா வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் மாநாட்டில் நாம் பலரும் பார்த்திராத காட்சிகள் மற்றும் பூமி பூஜை நடிகர் விஜய் பேசி அரசியல் வசனங்கள் ஆகியவைகள் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.