திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் புதூரில் பிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு கடந்த திங்கட்கிழமை சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை கோவில் வளாகத்தில் இருக்கும் இலவச குளிக்கும் இடத்தில் பிரகாசம் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரகாசம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
