தமிழ்நாட்டில் எந்தவொரு பெரிய அரசியல் கட்சி விழாக்கள் அல்லது மாநாடுகள் நடந்தாலும், நிகழ்ச்சி முடிந்த அடுத்த கணமே மேடை மற்றும் பந்தல்களில் அலங்காரத்திற்காகக் கட்டப்பட்டிருக்கும் விலை உயர்ந்த வாழைத்தார்களை மக்கள் மற்றும் தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடித்துப் பிடித்து கழற்றி எடுத்துச் செல்வதுதான் வழக்கமான வாடிக்கை. ஆனால், திருச்சியில் நடந்து முடிந்த தமிழக முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் இதற்கு முற்றிலும் மாறாக ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது!

நிகழ்ச்சி முடிந்து முதல்வர் விஜய் மற்றும் முக்கிய விஐபிக்கள் அனைவரும் கிளம்பிய பிறகும், விழா பந்தலில் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழைத்தார்களை அங்கிருந்த தவெக தொண்டர்களோ அல்லது பொதுமக்களோ ஒருத்தர் கூட கை வைக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

“நம்ம தலைவரோட பேருக்கு எந்தக் களங்கமும் வந்துடக் கூடாது” என்ற அதீத ஒழுக்கத்தோடு, விழா மேடை அலங்காரங்களைச் சேதப்படுத்தாமல் அப்படியே கண்ணியத்தோடு கலைந்து சென்றுள்ளனர் திருச்சி மக்கள். எப்போதும் அரசியல் கூட்டங்கள் முடிந்ததும் நடக்கும் ‘வாழைத்தார்’ திருட்டுப் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில், திருச்சியில் அரங்கேறியுள்ள தவெக-வினரின் இந்த அதிரடி மாற்றமும், ஒழுக்கமும் இப்போ ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்தையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து, சோசியல் மீடியாவில் செம ஹாட் ட்ரெண்டிங்காக ஓடிக்கிட்டிருக்குப்பா!

“>