தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் என்னும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலம் தேறி படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார். இவர் பாலிவுட்டில் சிடாடல் எனும் ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். அதன்பிறகு தெலுங்கில் நடிகர் விஜய் தேவர கொண்டவுடன் நடித்து வரும் குஷி படப்பிடிப்பிலும் சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் பெயர் டுவிட்டரில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தேடி பார்க்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் தளபதி 67 படத்தில் நடித்து வருவதால் தேசிய அளவில் #Thalapathi67update என்ற ஹேஷ்டேக் ஆகி வருகிறது. இதேபோன்று உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றதால் #Indaian2 என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி உள்ளது. ஆனால் இந்த 2 ஹேஷ்டேக்குகளையும் நடிகை சமந்தா முந்தி கொண்டுவிட்டு தற்போது டுவிட்டரில் முன்னிலையில் இருக்கிறார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியதால் தான் நடிகை சமந்தாவின் பெயர் டுவிட்டரில் முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.