தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பாராட்டை பெற்றவர். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் ஆவதால் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பிறகு கத்ரீனா கைஃபுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்திலும், தி ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரை இயக்கிய இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் ஒரு ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை கட்டையால் அடித்து துரத்துவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் விஜய் சேதுபதியின் படம் அடங்கிய ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் அபாயம் இது தமிழ்நாடா இல்ல வட நாடா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதோடு விழித்துக் கொள் தமிழா. வருங்காலம் வடமாநிலத்தவர்களுக்கா. பாய் காட் வடக்கன்ஸ் போன்ற வாசகங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.