தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. இவர் தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூர்ணா கடைசியாக பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி நடிகை பூர்ணாவுக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆன பிறகு நடிகை பூர்ணா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை நடிகை பூர்ணா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.