தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருக்கும் காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் கருங்காப்பியம். இந்த படத்தை கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் கலையரசன் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்காலத்தை கணிக்கும் புத்தகத்தில் எழுதப்பட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து ஹாரர் திரில்லர் படமாக கருங்காப்பியம் உருவாகி உள்ளது.

மேலும் ஹாரர் கதை அம்சத்தில் உருவாகியுள்ள கருங்காப்பியம் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தமிழில் வெளியிட்டார். மேலும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.