பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழில் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சன்னி லியோனுக்கு படப்பிடிப்பு தளத்தில் திடீரென அடிபட்டு கால் விரலில் இருந்து ரத்தம் வந்துள்ளது.

இதனால் நடிகை சன்னி லியோன் வலி தாங்க முடியாமல் கத்தி அழுதுள்ளார். இதனையடுத்து படக்குழுவினர் அங்கு வந்து சன்னி லியோனுக்கு முதலுதவி அளித்தனர்.  இது தொடர்பான வீடியோவை நடிகை சன்னி லியோன் தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சன்னி லியோன் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)