தமிழகத்தில் அரங்கேறிய தேர்தல் அதிரடிகளுக்குப் பிறகு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவை அமையவுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தையே அதிரவைக்கும் அடுத்த மெகா திருப்பம் இன்று நிகழ்ந்துள்ளது.
தவெக அமைச்சரவையில் தங்களும் இணையப் போவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் இன்று (மே 21) அதிரடியாக அறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெரிய மனதோடு எங்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் விஜய்க்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்; கட்சியின் முடிவின்படி நாங்கள் அமைச்சரவையில் இணைகிறோம்” என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகான் தங்கள் கட்சி சார்பில் தவெக அமைச்சரவையில் மந்திரியாகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
