தவெக அமைச்சரவையில் இணையப் போவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அதிரடி முடிவெடுத்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தாம் பேசிய உருக்கமான விபரங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நான் பேசினேன். இத்தனை காலம் தங்களுடன் சேர்ந்து பயணித்ததற்கு அவர் எங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார். அதோடு மட்டுமில்லாமல், தற்போது நாங்கள் எடுத்திருக்கும் இந்த புதிய முடிவுக்கு எவ்வித கசப்பும் இன்றி தனது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்” எனத் தெரிவித்தார்.

நீண்டகால அரசியல் கூட்டணிக்கு மத்தியில், இந்த முடிவுக்கு  மு.க.ஸ்டாலின் காட்டிய இந்த அரசியல் நாகரிகம், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

“>