தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் அவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளை நேரில் தெரிவிக்க, கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி 650 கிலோமீட்டர் நடைபயணத்தைத் தொடங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புறத்தைச் சேர்ந்த முகமது ரபி மற்றும் அவரது மனைவி உம்மு ஷஹானா ஆகிய இருவரும், விஜய்யின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் கடந்த மே 7-ம் தேதி தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by RAFI SHAHANA (@mallu_kicks_travel)

மல்லப்புரம் முதல் சென்னை வரை backpacks மற்றும் கூடாரங்களுடன் நீண்ட தூரம் பயணிக்கும் இந்த ஜோடி, தங்களது பயண அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

“இதுதான் உண்மையான தளபதி பாசம்” என ரசிகர்கள் இவர்களது வீடியோக்களை வைரலாக்கி வரும் நிலையில், தற்போது இவர்கள் பாலக்காடு அருகே உள்ள பரலி பகுதியை எட்டியுள்ளனர்.

வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் தனது தலைவனை காணத் துடிக்கும் இந்த கேரள தம்பதியின் செயல், சமூக வலைதளங்களில் ‘பீக் விஜய் மொமெண்ட்’ (Peak Vijay Moment) எனப் போற்றப்பட்டு வருகிறது.