மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீண்ட காலம் நீடித்ததற்கு திமுக ஒரு முக்கிய காரணமாக இருந்தும், காங்கிரஸ் கட்சி அதிகாரப் பசியால் அந்த நன்றியை மறந்துவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகாலமாகத் தோழமையுடன் இருந்த திமுகவின் முதுகில், காங்கிரஸ் கட்சி தனது சுயநலத்திற்காகக் குத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எப்போதும் மற்றொரு கட்சியின் முதுகில் ஏறிப் பயணம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளதாகச் சாடியுள்ள மோடி, அவர்களின் அதிகார மோகத்தால் பழைய கூட்டணிகள் சிதைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லி அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் மற்றும் பிரதமரின் இந்தச் சீறல் தற்போது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.