தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நேரில் வருகை தந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சென்னையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், அரசியல் களத்தில் விஜய் ஒரு புதிய வரலாறு படைத்திருப்பதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, மிகவும் கஷ்டப்பட்டுப் போராடி இன்று இந்த வெற்றியை அவர் எட்டிப்பிடித்துள்ளதாகக் கயல்விழி பாராட்டு தெரிவித்தார்.

திராவிடப் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த கயல்விழி, முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு அவரைப் பாராட்டியிருப்பது தமிழக அரசியல் களத்தில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.