புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என் புரம் நவரத்தின நகரில் பிரம்மன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சுப்பம்மாள்(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் சுப்பம்மாள் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

நேற்று கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் சுப்பம்மாள் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுப்பம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுப்பம்மாளை கொலை செய்தது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.