சேலம் மாவட்டத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. கூடுதல் பணம் வசூலித்தால் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் ரயில்வே கேட் பகுதியில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையில் கூடுதலாக பத்து ரூபாய் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது விற்பனையாளர் முத்துசாமி என்பவர் மதுபானங்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தது தெரியவந்தது. இதனால் மாவட்ட மேலாளர் குப்புசாமி முத்துசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.