இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 34,000-க்கும்  அதிகமான பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். அவ்வப்போது ரஃபா நகரிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கொலம்பியா நாட்டின் அதிபர் குஸ்டோவா பெட்ரோ இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதாவது இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ள அவர் காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.