நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா வெற்றியைப் பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதனைத் தமிழகம் முழுவதும் உள்ள த.வெ.க தொண்டர்கள் பல்வேறு வழிகளில் கோலாகலமாகக் கொண்டாடி வரும் வேளையில், விருதுநகரில் த.வெ.க சார்பில் ஒரு நெகிழ்ச்சியான மக்கள் சேவை நிகழ்வு அரங்கேறியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றத்தை கொண்டாடும் விதமாக விருதுநகரில்
108 பேர் த.வெ.க சார்பில் ரத்ததானம்.#TVK @TVKVijayHQ pic.twitter.com/CR5gUa6xuC— Diya ✨️ (@PinkSonnet1) May 23, 2026
தங்கள் கட்சி வென்ற 108 தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் விதமாக, விருதுநகரில் த.வெ.க சார்பில் 108 தொண்டர்கள் ஒன்றிணைந்து அதிரடியாக ரத்ததானம் செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய் பதவியேற்றதை வெறும் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 108 பேர் ரத்ததானம் செய்து கொண்டாடிய த.வெ.க தொண்டர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது!
