மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில், எதிர்பாராதவிதமாக மது பாட்டில்கள் உடைந்து சாலையில் மது ஆறு போல ஓடியுள்ளது. இதைப் பார்த்த ஒரு நபர், கீழே சிந்திய மதுவை வீணாக்க மனமில்லாமல், தனது துண்டை (Towel) அந்த மதுவின் மீது போட்டு வடிகட்டி, தரையிலேயே படுத்துக் குடிக்கத் தொடங்கினார். தாகத்தில் தவித்தவர் தண்ணீரைத் தேடுவது போல, போதையில் இருந்த அந்த நபர் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

​இந்த அருவருப்பான செயலைக் கவனித்த காவல்துறையினர், உடனடியாக அந்த நபரின் பின்னாலிருந்து வந்து அடுத்தடுத்து இரண்டு பலமான அறைகளைக் கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “எனது நாடு உண்மையிலேயே விசித்திரமானது, முன்னேற இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும்” என்று நெட்டிசன்கள் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசு மதுவிலக்கை அமல்படுத்தினாலும், மக்களின் மனநிலையில் மாற்றம் வராத வரை இத்தகைய விசித்திரமான மற்றும் ஆபத்தான சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.