மத்திய அரசு தூய்மை பாரதத் திட்டத்திற்காகக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழித்து வரும் வேளையில், பொதுமக்களின் பொறுப்பற்றச் செயல்கள் அதனைப் பாழாக்கி வருகின்றன. சமீபத்தில் சிக்மி மாநிலத்தில் காரில் பயணம் செய்த ஒரு வடமாநில நபர், ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் தோலைச் சாலையிலேயே வீசிச் சென்றுள்ளார். இதைக் கவனித்த அங்கிருந்த போலீஸார், உடனடியாக அந்த நபரின் காரை வழிமறித்து, அவரைத் திரும்ப அழைத்துச் சென்று சாலையில் அவர் வீசிய ஒவ்வொரு குப்பையையும் அவரது கைகளாலேயே அள்ள வைத்துள்ளனர்.

​இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிக்மி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மற்ற இடங்களிலும் இப்படித்தான் அசுத்தம் செய்ய வேண்டுமா என்ற காரசாரமான விவாதங்களும் எழுந்துள்ளன. சிக்மி போன்ற தூய்மையான மாநிலங்களில் நிலவும் இத்தகைய கடுமையான விதிகள் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே நாடு முழுமையான தூய்மையை அடையும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.