உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த 24 வயதான அர்மான் என்ற வாலிபர், தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய மாணவிகளிடம் ஆபாசமான வார்த்தைகளைப் பேசித் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் புகார் எழுந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரி ஒருவர், அந்த நபரை மக்கள் முன்னிலையிலேயே சரமாரியாகத் தாக்கியுள்ளார். மாணவிகளிடம் வரம்பு மீறி நடந்துகொண்ட அந்த வாலிபருக்குக் காவல்துறையினர் கொடுத்த இந்த ‘உடனடித் தண்டனை’ அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
Name: Arman
Age: 24 yearsCrime: Harassing girls returning from exams and making vulgar remarks.
Action Taken: #Police have dealt with the issue and taken action against the accused for harassment..👏🏾 pic.twitter.com/y8OB7pfZwe
— Rupsy Saini (@ZiviiBloom) February 25, 2026
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அர்மான் செய்த தவறுக்காகக் காவல் அதிகாரி அவரை அடித்து வெளுப்பதைக் காண முடிகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு இணையவாசிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன் இப்படிப் பகிரங்கமாகத் தாக்குவது குறித்த விவாதங்களும் ஒருபுறம் எழுந்துள்ளன. இருப்பினும், தவறு செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
