தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவில் முதன்முதலாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவரின் குறும்புத்தனமான நடிப்பாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்று நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா தலைகீழாக நின்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jyotika இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jyotika)