தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியாக இணைந்து விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க திட்டம் தீட்டியதாகவும், அதனை எடப்பாடி பழனிசாமி தடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்கு விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தங்கள் தலைவர் திருமாவளவனை முதல்வராக்க மறுத்தார் என்ற சி.வி. சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கூட்டணிக் கணக்குகள் மாறி வரும் சூழலில், இந்த புதிய மோதல் அரசியல் களம் மேலும் சூடாகியுள்ளது.
