தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கு அரசியல் வட்டாரங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இடதுசாரி கட்சிகள் இந்த நியமனம் குறித்துத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. இந்நிலையில், அந்த நியமனத்தை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனதாரப் பாராட்டியுள்ளது.
”விமர்சனங்களுக்குக் காது கொடுத்து, உரிய நடவடிக்கை எடுத்துள்ள அரசின் ஜனநாயகப் பண்பு பாராட்டுக்குரியது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசின் இந்த ஆரோக்கியமான அணுகுமுறை வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து முதல்வர் எடுத்த இந்த ‘யூ-டர்ன்’ முடிவு, அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
