தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு புதிய நியமனம் குறித்த தகவல் சர்ச்சையாக வெடித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜயின் முந்தைய ஆடம்பர கார் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கை கவனித்து வந்த மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், தற்போது தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக (Advocate General) நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ஒருவரை நியமித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது தனது தனிப்பட்ட வழக்கை நடத்திய வழக்கறிஞருக்கே அரசுப் பொறுப்பு வழங்கப்படுவது அரசியல் ரீதியாக விவாதங்களை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை அரசு வாபஸ் பெற்ற முடிவை ஜனநாயகப் பண்பு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியிருந்த நிலையில், இந்த புதிய தகவல் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.