தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், பொதுமக்களுக்கு இடையூறாகச் சட்டவிரோதமாக மதுக்கடை ஒன்று இயங்கி வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், கடையில் இருந்த மது பாட்டில்களை அடித்து நொறுக்கி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெண்களின் இந்த ஆவேசமான போராட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மது வியாபாரி, அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். விடாத பெண்கள் அவரை ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிராமத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் இயங்கும் இது போன்ற போலி மதுக்கடைகளை போலீசார் உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.