சென்னை: தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அறிவாலயத்தில் நடந்த அதிரடி உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் ரகசியப் பேச்சுவார்த்தைகள் குறித்து சவுக்கு மீடியா நிறுவனர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் மேலும் பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

​அவர் பேசுகையில், “தேர்தல் ரிசல்ட் வெளியானவுடன் உதயநிதி ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் டிவியை உடைத்துவிட்டுத் தனது அம்மாவிடம் போய், ‘விஜயையெல்லாம் நான் எப்படி முதலமைச்சராகப் பார்ப்பது?’ என்று சொல்லி ஒப்பாரி வைத்தார். இதைப் பார்த்துப் பதறிய துர்கா ஸ்டாலின், உடனடியாக அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளைத் தனது இடத்திற்கு வரவழைத்துள்ளார்” என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

​மேலும், “அவர்களிடம் துர்கா ஸ்டாலின், ‘தம்பி அழுதுட்டு இருக்கு… நீங்கல்லாம் எதுக்கு இருக்கீங்க? உடனே போய் ஏதாவது பண்ணுங்க’ என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார். துர்கா ஸ்டாலின் கொடுத்த அந்த அழுத்தத்திற்குப் பிறகுதான், சேகர் பாபு உள்ளிட்ட சிலர் எடப்பாடி பழனிச்சாமியை ரகசியமாகத் தொடர்பு கொண்டு, வெளியில் இருந்து ஆதரவு தந்து ஆட்சியில் அமர்த்தப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்” என சவுக்கு சங்கர் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.