தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும், நகைப்பிரியர்களுக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தலா 1 சதவீதம் அதிகரித்துள்ளதன் நேரடி எதிரொலியாக, நம்மூரிலும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ₹1,280 உயர்ந்துள்ளது.

இதன் மூலம், 22 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு ₹160 அதிகரித்து ₹14,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ₹5 அதிகரித்து ₹265-க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் இந்த விலை உயர்வு, வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.