தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று பேசியிருந்தார். இவர் தெரிவித்திருந்த கருத்துகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த பாட புத்தகத்தின் புகைப்படத்தை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.