மழைக் காலத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார். பள்ளிச் சுவர்களின் உறுதித் தன்மையை உறுதி செய்யவும், விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது .அனைத்து மின் இணைப்புகளும் பள்ளிகளில் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தேவையென்றால்மின் இணைப்பை  தற்காலிகமாக துண்டித்து வைக்க வேண்டும். திறந்தவெளி தொட்டி இருந்தால் அவற்றை மூடப்பட்ட நிலையில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.