திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்களின் குறைகளை அதிநவீன முறையில் கேட்டறிந்து தீர்வு வழங்கும் இந்த முகாம்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

மேலும், “ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், திட்டத்தின் வெற்றியை பொறுக்க முடியாமல் சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எது எப்படியிருந்தாலும் நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுவோம். திட்டத்தின் பெயரையே வைத்து சிலர் அரசியல் செய்வது வருந்தத்தக்கது.

அதே நேரத்தில், இந்த கல்வியாண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.