சென்னையில் உள்ள திருவேற்காடு பகுதியில் இன்று திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த விழாவில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் உதயநிதி மற்றும் சீமான் திடீரென சந்தித்துக் கொண்ட நிலையிலும் அரசியல் பகையை மறந்து ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அன்பைப் பொழிந்து சிரித்து பேசினர். மேலும்  இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது சீமான் மற்றும் ஸ்டாலின் இருவரும் சந்தித்த நிலையில் அவர்கள் இருவரும் சிரித்து பேசியது குறிப்பிடத்தக்கது.