கிளாம்பாக்கம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தவெக நிர்வாகி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தயிர் சின்னாமநகரைச் சேர்ந்த கருணாகரனின் மகன் பிரவீன்குமார் (23), அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது வீட்டின் அருகில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்மக் கும்பல் வழி கேட்பது போல் நடித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது.
திடீரென அவர்களில் மூவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரவீன்குமாரைத் தலை, கைகள் மற்றும் முதுகில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். அக்கம் பக்கத்தினர் மீட்டு கிளாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தவெக நிர்வாகியான எழுமலை என்பவரின் மகளுடன் பிரவீன்குமாருக்கு இருந்த காதல் விவகாரமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், வாலிபர் உயிரிழந்ததை அடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்தவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் ஓஎம்ஆர் சாலையில்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
MAN WAS HACKED TO DEATH IN KELAMBAKKAM OVER A LOVE AFFAIR
TVK FUNCTIONARY EZHUMALAI, HIS SON GOWTHAM & TWO OTHERS ARRESTED UNDER MURDER CHARGES
A 23-year-old man died after he was hacked by a group near Kelambakkam following a dispute over his relationship with a woman. Three… pic.twitter.com/3Lc87ejUto
— A Selvaraj (@Crime_Selvaraj) August 22, 2026
“>
இதனையடுத்து, தவெக நிர்வாகி எழுமலை, அவரது உறவினர் மணிகண்டன், நந்தீஷ் மற்றும் எழுமலையின் மகன் கவுதம் ஆகிய நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
