சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பெரும்பகுதி நிலங்கள் தனியார் வசம் உள்ளதால், ஆரம்பம் முதலே அப்பகுதி மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தவெக கட்சி தொடங்கப்பட்டது முதல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து வரும் தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்த பிறகு இது தொடர்பாக இரண்டு முறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இருப்பினும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்த தங்களது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு இதுவரை எந்தவித கடிலமும் மூலம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாகக் கருதி பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்துத் தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.
இதற்கிடையில், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அவசியமானது என்றும், பரந்தூரில் அமையவில்லை என்றால் தமிழகத்திற்கு வரவிருக்கும் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடும் என்றும் அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னை 2வது விமான நிலையத்துக்கு இடம் தேடும் அதிகாரிகள்: பிடிவாதம் காட்டிய விஜய்!.
சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று… pic.twitter.com/39Gps3Hgxw
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 22, 2026
“>
ஆனாலும், எத்தகைய சவால்கள் வந்தாலும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், மாற்று இடங்களைத் தேர்வு செய்யுமாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
