மின் கம்பி கொள்முதலில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே விலையில் பல நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளதும், சில விண்ணப்பங்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
அரசு நிர்ணயித்த மதிப்பைவிட அதிக விலை கொடுத்துத் தரமற்ற மின் கம்பிகளைக் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும், மக்களின் வரிப்பணம் யாருடைய பாக்கெட்டுக்குள் சென்றது என்றும் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
மின்சாரம் மக்களின் அத்தியாவசியத் தேவை என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் அலட்சியம் காட்டப்படுகிறதா என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
மின் கம்பி கொள்முதலில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு!
ஒரே விலையில் பல நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளதாகவும், சில விண்ணப்பங்கள் ஒரே IP முகவரியிலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலை கொடுத்து,… pic.twitter.com/WzEyMSxXFS
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 22, 2026
“>
இது போன்ற தொடர்ச்சியான முறைகேடுகளின் மூலம் திராவிட மாடல் ஆட்சியின் உண்மையான முகம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
