தமிழகத்தில் இன்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை. இதன் காரணமாக நாளை பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை. இதேபோன்று இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் யாரும் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தடையை மீறி கடைகளை திறந்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
