தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. அதனைப் போலவே 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி தேர்வுகள் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.